Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் அனுப்பும் புதிய சேவைக்கு அனுமதி

இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் அனுப்பும் புதிய சேவைக்கு அனுமதி

By: Karunakaran Fri, 06 Nov 2020 1:05:08 PM

இந்தியாவில் வாட்ஸ்அப் செயலி மூலம் பணம் அனுப்பும் புதிய சேவைக்கு அனுமதி

இந்தியாவில் யுபிஐ சேவையை வழங்கி வரும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் வாட்ஸ்அப் பே சேவைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியில் இருந்தபடி பணம் அனுப்ப முடியும். முதற்கட்டமாக இந்த அம்சம் 2 கோடி பேருக்கு வழங்கப்படுகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த அம்சம் தற்சமயம் படிப்படியாக பயன்பாட்டிற்கு வருகிறது. புதிய அம்சம் வாட்ஸ்அப் சாட் பாக்சில் இருந்தபடி பயனர்கள் மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதியை வழங்குகிறது. பணம் அனுப்புவது மட்டுமின்றி பண பரிமாற்ற விவரங்கள், முந்தைய பரிமாற்ற தகவல்கள் உள்ளிட்டவைகளை எப்போது வேண்டுமானாலும் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.

new service,money,whatsapp processor,india ,புதிய சேவை, பணம், வாட்ஸ்அப் செயலி, இந்தியா

இந்த வாட்ஸ்அப் பே அம்சத்தை இயக்குவது எப்படி?

1. முதலில் காண்டாக்ட்டில் யாருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்பதை க்ளிக் செய்ய வேண்டும்
2. அடுத்து வாட்ஸ்அப் செயலியின் சாட் பாக்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஷேர் ஃபைல் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

3. இனி டாக்யூமென்ட் மற்றும் கேலரி ஆப்ஷன்களுக்கு இடையில் உள்ள பேமெண்ட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
4. பின் அனுப்ப வேண்டிய தொகையை பதிவிட்டு யுபிஐ விவரங்களை உள்ளீடு செய்தால் பணம் அனுப்பப்பட்டு விடும்

Tags :
|