Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிங்கப்பூரில் ஜூன் 19 ஆம் தேதி முதல் பொது நிகழ்வுகளுக்கு அனுமதி

சிங்கப்பூரில் ஜூன் 19 ஆம் தேதி முதல் பொது நிகழ்வுகளுக்கு அனுமதி

By: Monisha Tue, 16 June 2020 6:09:00 PM

சிங்கப்பூரில் ஜூன் 19 ஆம் தேதி முதல் பொது நிகழ்வுகளுக்கு அனுமதி

உலகம் முழுவது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தைக் கடந்துள்ளது. சிங்கப்பூரில் இதுவரை 40,818 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30,366 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் சிங்கப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்கில் சில தளர்வுகளைக் கொண்டுவர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் அரசு கூறியிருப்பதாவது:- “சிங்கப்பூரில் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை முதல் ஊரடங்கில் சில தளர்வுகளைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடைகள், சிறு வணிக நிறுவனங்கள் ஆகியவை திறக்கப்பட உள்ளன.

singapore,corona virus,curfew,social distance ,சிங்கப்பூர்,கொரோனா வைரஸ்,ஊரடங்கு,சமூக இடைவெளி

மேலும் ஜூன் 19 ஆம் தேதி முதல் பெரும்பாலான பொது நிகழ்வுகளை உரிய சமூக இடைவெளியுடன் நடத்தவும் சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுக்குள் ஒரு மீட்டர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தொழிலாளர் விடுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். மிக நெருக்கமாகக் கட்டப்பட்டு இருக்கும் அத்தகைய விடுதிகளில்தான் தற்போது அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. எனவே, விடுதிகளை மையமாக வைத்து சிங்கப்பூர் அரசு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து வருகிறது.

Tags :
|