Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவிஷீல்டு தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க புனேயின் சீரம் நிறுவனம் அனுமதி

கோவிஷீல்டு தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க புனேயின் சீரம் நிறுவனம் அனுமதி

By: Karunakaran Wed, 09 Dec 2020 3:49:40 PM

கோவிஷீல்டு தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க புனேயின் சீரம் நிறுவனம் அனுமதி

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் கொரோனா மருந்து கண்டுபிடிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு எனும் தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசி கடந்த 8 மாதங்களாக 3 கட்டங்களில் உலகம் முழுவதும் பரிசோதிக்கப்பட்டது.

இங்கிலாந்து மற்றும் பிரேசிலை சேர்ந்த 11 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களிடம் 2 கட்டங்களாக தடுப்பூசி செலுத்தி பரிசோதித்ததன் மூலம் கிடைத்த தகவலில், ஒட்டுமொத்தமாக தடுப்பூசி 70 சதவீதம் பயனளிப்பதாக தகவல்களை ஆய்வு செய்த வெளி ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

pune serum company,covshield vaccine,emergency,central government ,புனே சீரம் நிறுவனம், கோவ்ஷீல்ட் தடுப்பூசி, அவசரநிலை, மத்திய அரசு

தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தியவர்களை 2 குழுக்களாக பிரித்தனர். ஒரு பிரிவுக்கு வழக்கமான மருந்தும், அதை தொடர்ந்து பூஸ்டர் மருந்தும் கொடுக்கப்பட்டது. 2-வது குழுவுக்கு முதலில் குறைந்த அளவு தடுப்பூசி அளித்தனர். பின்னர் வழக்கமான தடுப்பூசி செலுத்தியுள்ளனர். குறைந்த அளவு தடுப்பூசி பெற்ற 2-வது குழு 90 சதவீத செயல் திறனை காட்டியது. அதே சமயம் முதலில் வழக்கமான மருந்து வழங்கப்பட்ட குழுவினரிடம் 62.1 சதவீதம் செயல்திறனே காணப்பட்டது.

ஒட்டுமொத்தமாக 2 டோஸ் மருந்து அளிக்கப்பட்டவுடன் 70 சதவீதம் பேர் கொரோனா அறிகுறிகளில் இருந்து தப்பிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கி உள்ள கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க புனேயின் சீரம் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. மேலும் கோவிஷீல்டு தடுப்புப் மருந்தை இந்தியாவில் ரூ.250-க்கு விற்பனை செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Tags :