Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பைசர் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் - பைசர் நிறுவனம் கோரிக்கை

பைசர் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் - பைசர் நிறுவனம் கோரிக்கை

By: Karunakaran Sat, 21 Nov 2020 10:43:52 AM

பைசர் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் - பைசர் நிறுவனம் கோரிக்கை

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகளும், நிறுவனங்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதில் சில நிறுவனங்கள் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளன. உலகளவில் கொரோனா பாதிப்புள்ள அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த தடுப்பு மருந்து, இறுதிக்கட்ட பகுப்பாய்வு தரவுகளின்படி 95 சதவீதம் திறன் வாய்ந்தது. இந்நிலையில் பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ள கோரிக்கையில். எங்கள் தடுப்பு மருந்து அனைத்து தரப்பினருக்குமானது. வயதானோருக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. தீவிர பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளது.

america,pfizer vaccine,emergency purposes,corona vaccine ,அமெரிக்கா, ஃபைசர் தடுப்பூசி, அவசர தேவை, கொரோனா தடுப்பூசி

மேலும் அதில், இன்னும் சில நாட்களில் அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளதாக மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தங்களது தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்திடம் பைசர் நிறுவனம் கோரியுள்ளது.

மனிதர்களிடம் நடத்தப்படும் பரிசோதனையில் தங்களது தடுப்பூசி பாதுகாப்பானது என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அதை அவசர தேவைக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி பெற முடியும் என பைசர் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Tags :