Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பரிசோதனைக்கு பின்னர் பிற மாநிலத்தவர்கள் வர அனுமதி; புதுச்சேரி முதல்வர் தகவல்

பரிசோதனைக்கு பின்னர் பிற மாநிலத்தவர்கள் வர அனுமதி; புதுச்சேரி முதல்வர் தகவல்

By: Nagaraj Tue, 30 June 2020 10:00:47 PM

பரிசோதனைக்கு பின்னர் பிற மாநிலத்தவர்கள் வர அனுமதி; புதுச்சேரி முதல்வர் தகவல்

மத்திய அரசு உத்தரவுபடி பிற மாநிலத்தவர்கள் புதுச்சேரிக்குள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு வர அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசின் அறிவிப்பின்படி பள்ளி, கல்லூரிகள், கல்வி பயிற்சி மையங்கள் ஜூலை 30-ஆம் தேதி வரை திறக்கக்கூடாது. ஜிம்கள், ஹோட்டல்களில் உள்ள மதுபான கூடங்கள் மூடப்பட்டு இருக்கும். ஏற்கெனவே வெளிமாநிலத்தில் இருந்து வருவோர்களுக்கு கடந்த 10 நாள்களாக தடை விதிக்கப்பட்டு எல்லைகள் மூடப்பட்டன. இதன் மூலம் புதுவையில் கொரோனா தொற்று குறைந்தது.

puducherry,outsider,examination,cm,announcement ,புதுச்சேரி, வெளி மாநிலத்தவர், பரிசோதனை, முதல்வர், அறிவிப்பு

இந்நிலையில், மத்திய அரசு உத்தரவுபடி பிற மாநிலத்தவர்கள் புதுவைக்குள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு வர அனுமதி அளிக்கப்படும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
அரசியல் கட்சிகள் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.

புதுவையில் இரண்டாம் கட்ட தளர்வு ஜூலை 3 முதல் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இப்போது அனைத்து கடைகளும் 2 மணி வரை மட்டுமே திறக்கலாம் என்ற நடைமுறை மாற்றப்பட்டு இரவு 8 மணி வரை திறக்கலாம்.

ஹோட்டல்கள் இரவு 8 மணிக்குள் பொட்டல உணவுகளை விற்பனை செய்து கொள்ளலாம். கடைகளை இரவு 9 மணிக்குள் மூடிவிட்டு செல்ல அனுமதி அளிக்கப்படும். இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமுடக்கம் முழுமையாக அமல்படுத்தப்படும்.

கடந்த 15 தினங்களாக சாலைகளில் வரும் பொதுமக்களுக்கு காவல்துறை தொல்லை கொடுப்பது தொடர்பாக மாநில காவல்துறை தலைவர் பாலாஜி ஸ்ரீவத்சவாவிடம் பேசியிருக்கிறேன். அதை கட்டுப்படுத்த உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

Tags :
|