Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோவில்களில் பூஜை நடத்துவதற்கு அனுமதி - முதல்வர் எடியூரப்பா

கோவில்களில் பூஜை நடத்துவதற்கு அனுமதி - முதல்வர் எடியூரப்பா

By: Monisha Wed, 27 May 2020 5:31:11 PM

கோவில்களில் பூஜை நடத்துவதற்கு அனுமதி - முதல்வர் எடியூரப்பா

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கோட்டா சீனிவாச பூஜாரி மற்றும் தலைமை செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. சலூன்கள், கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ஆட்டோ, பஸ்கள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டது.

state of karnataka,department of hindu religious affairs,chief minister,yeddyurappa
permission to hold pooja ,கர்நாடக மாநிலம்,இந்து சமய அறநிலையத்துறை,முதல்வர் எடியூரப்பா,பூஜை நடத்த அனுமதி

கோவில்களை திறப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின் முடிவில் கோவில்களில் பூஜை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் வருகிற 1-ந் தேதி முதல் தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். முதற்கட்டமாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் 52 கோவில்களில் இந்த வசதி அமல்படுத்தப்படுகிறது. அதன்பிறகு படிப்படியாக இது விரிவுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :