Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலைமுடி காணிக்கை, திருமணம் செய்ய அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலைமுடி காணிக்கை, திருமணம் செய்ய அனுமதி

By: Karunakaran Mon, 08 June 2020 09:52:00 AM

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தலைமுடி காணிக்கை, திருமணம் செய்ய அனுமதி

கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கினால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.

இன்றும், நாளையும் திருமலை-திருப்பதி தேவஸ்தான நிரந்தர ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அதன்பின், 10-ந்தேதி அங்குள்ள உள்ளூர் மக்கள்,திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.

coronavirus virus,thirumalai tirupathi,devotees,devasthan officers,temple of ezhumaliyan ,கொரோனா வைரஸ்,திருமலை திருப்பதி,பக்தர்கள்,தேவஸ்தான அதிகாரிகள்,ஏழுமலையான் கோவில்

11-ந்தேதி முதல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பொது தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு 500 பக்தர்கள் எனும் வீதம் படி, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

தற்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமலையில் உள்ள கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தலாம். மேலும் திருமலையில் பொதுமக்கள் திருமணங்களை நடத்த அனுமதிக்கப்படும். திருமண நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :