Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திரையரங்கம் திறக்க எப்போது அனுமதி கிடைக்கும்; எதிர்பார்ப்பில் உரிமையாளர்கள்

திரையரங்கம் திறக்க எப்போது அனுமதி கிடைக்கும்; எதிர்பார்ப்பில் உரிமையாளர்கள்

By: Nagaraj Wed, 15 July 2020 10:21:53 PM

திரையரங்கம் திறக்க எப்போது அனுமதி கிடைக்கும்; எதிர்பார்ப்பில் உரிமையாளர்கள்

திரையரங்கம் திறக்க அரசு எப்போது அனுமதி அளிக்கும் என்று உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர். மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரை திரையரங்குகள் இந்தியாவில் மூடப்பட்டு தான் இருக்கிறது.

கொரோனாவின் சூழலால் பல துறைகள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதில் அதிகமாக பாதிப்பை சந்தித்தது கண்டிப்பாக திரைத்துறை என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனென்றால் மற்ற துறைகள் ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல அவர்களுடைய பணிகளைக் குறைந்த ஆட்களைக் கொண்டு தொடங்கி இருக்கக் கூடிய சூழ்நிலையில் திரைத்துறைக்கு மட்டும் இன்னும் அதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையவில்லை.

நான்கு மாதங்களாக மூடப்பட்டிருக்கும் திரையரங்குகளுக்கு பின்புலத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலர் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். மேலும் திரையரங்கு உரிமையாளர்கள் பலர் அரசுக்கு அவர்கள் தரப்பில் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மின்சாரக்கட்டணம், கேளிக்கை வரி ரத்து, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றில் தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

theaters,government,decision,expectation,owners ,திரையரங்குகள், அரசு, முடிவு, எதிர்பார்ப்பு, உரிமையாளர்கள்

இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது. திரையரங்கள் திறக்கப்பட்டு அதற்கான சூழ்நிலைகள் வந்தாலும் திரையரங்குகள் பழையபடி மக்கள் கூட்டம் வருமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. இதனால் மேலும் பல விதமான கட்டுப்பாடுகளையும் திரையரங்குகள் கடைபிடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் அவர்களின் வருமானம் பழையபடி இருக்குமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

மேலும் அரசு தரப்பில் வந்திருக்கும் தகவல்களில் ஒரு நாளைக்கு தினசரி 4 காட்சிகள் நடத்தப்பட்டு வந்த திரையரங்குகள் இரண்டு காட்சிகள் மட்டுமே நடத்தப்படுவதற்கு அனுமதிகள் அளிக்கப்படலாம் என்கிற தகவல்களும் வந்திருக்கிறது. விரைவில் திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து அரசு முடிவு எடுக்க இருக்கிறது.

Tags :