Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி

தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி

By: Monisha Tue, 25 Aug 2020 2:31:10 PM

தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி

தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை இரண்டுமருத்துவ கல்லூரிகளில் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் முன்னணி நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. ரஷியா தடுப்பூசியை உலக அளவில் முதல் நாடாக பதிவு செய்துவிட்டோம் எனக்கூறி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்தியாவிலும் 3 வித தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன.

இதற்கிடையே லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள கோவிஷீல்டு என்ற கொரோனா மருந்தை தயாரிக்கும் அனுமதி இந்தியாவின் புனே சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு வழங்கப்பட்டது.

corona virus,covshield,vaccine,chennai,serum institute ,கொரோனா வைரஸ்,கோவிஷீல்டு,தடுப்பூசி,சென்னை,சீரம் இன்ஸ்டிடியூட்

இந்த மருந்து இந்தியாவில் சோதனை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியதை அடுத்து முதற்கட்ட சோதனை முடிக்கப்பட்டு இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் 2-வது கட்ட மனித சோதனை தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவில் 17 நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. விலை குறைவாகவும் அனைத்து வயது தரப்பு மக்களும் பயன்பெரும் வகையில் ஜெனிரிக் முறையில் மருந்து தயாரிக்க திட்டமிட்டு சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கோவிஷீல்டு தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags :