Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூரி ஜெகநாதர் ரத யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் இன்று விசாரணை

பூரி ஜெகநாதர் ரத யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் இன்று விசாரணை

By: Karunakaran Mon, 22 June 2020 12:59:16 PM

பூரி ஜெகநாதர் ரத யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனுக்கள் இன்று விசாரணை

ஒடிசாவில் ஆண்டுதோறும் நடைபெறும் பூரி ஜெகநாதர் கோவில் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை வருகிற 23-ந்தேதி அதாவது நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், ஐகோர்ட்டு கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்த உத்தரவிட்டுள்ளது.

லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வதால் கொரோனா தொற்று பரவலாம் என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரத யாத்திரையை தள்ளி வைக்க ஒடிசா விகாஸ் பரிசத் என்ற பொது நல அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரைக்கு கடந்த 18ம் தேதி நீதிபதிகள் தடை விதித்து உத்தரவிட்டனர்.

puri jagannath,ratha pilgrimage,supreme court,petitions ,பூரி ஜெகநாதர்,ரத யாத்திரை,மனு விசாரணை,உச்சநீதிமன்றம்

பக்தர்கள் அதிக அளவில் கூடலாம் என்பதால் கொரோனா பரவாமல் தடுக்க இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து இந்த ஆண்டு ரத யாத்திரையை நடத்த அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் விசாரணை இன்று நடைபெறவுள்ளது.

ரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பின், கோவில் நிர்வாகக் குழு தலைவர், முதல்வருக்கு அவசர கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், மாநில அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி, ரத யாத்திரை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

Tags :