Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெட்ரோல், டீசல் விலை இலங்கையில் மீண்டும் உயர்ந்துள்ளது

பெட்ரோல், டீசல் விலை இலங்கையில் மீண்டும் உயர்ந்துள்ளது

By: vaithegi Sun, 26 June 2022 12:41:01 PM

பெட்ரோல், டீசல் விலை இலங்கையில் மீண்டும் உயர்ந்துள்ளது

இலங்கை: இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் உணவுப் பொருட்கள் முதல் அத்தியாவசியப் பொருட்களின் விலை என அனைத்து பொருள்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையும் இன்று உயர்ந்துள்ளது.

petrol,diesel,sri lanka ,பெட்ரோல், டீசல் ,இலங்கை

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 உயர்ந்து ரூ.470க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 உயர்ந்து ரூ.550க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து, சூப்பர் டீசல் ரூ.75 உயர்ந்து, ரூ.520க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இலங்கை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|