Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 85-வது நாளாக அதே விலையில் விற்பனை

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 85-வது நாளாக அதே விலையில் விற்பனை

By: vaithegi Sun, 14 Aug 2022 09:57:34 AM

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 85-வது நாளாக அதே விலையில் விற்பனை

சென்னை: பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.இந்நிலையில் தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.

இதனால் பெட்ரோல்,டீசல் விலை தொடந்து உயர்வாக இருந்தன. வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த மே 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

petrol,sales ,பெட்ரோல்,விற்பனை

அந்த அறிவிப்பில் பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும் டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ7 குறைக்கப்பட்டது. இதனால் மே 22 ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை குறைந்தது. அன்றைய தினத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 102.63 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் விலை ரூ. 94.24- ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில் அதன்பிறகு விற்பனையாகும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த ஒரு மாற்றமும் இன்றி தொடர்ந்து அதேவிலையில் நீடிக்கிறது. இதனால் தொடர்ந்து 84-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.

Tags :
|