Advertisement

358-வது நாளாக மாற்றமில்லாத பெட்ரோல் ,டீசல் விலை

By: vaithegi Sun, 14 May 2023 10:18:31 AM

358-வது நாளாக மாற்றமில்லாத பெட்ரோல் ,டீசல் விலை

சென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலை .... கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 லட்சம் பீப்பாய்க்கு (பேரல்) மேல் குறைக்க ஒபெக் நாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவு செய்திருந்ததால் கச்சா எண்ணெய் விலை 6% அதிகரித்தது.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.

அந்த வகையில், தற்பொழுது இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 76.00 அல்லது 1.3% என்று குறைந்து ரூ.5767 ஆக உள்ளது.

petrol,diesel ,பெட்ரோல் ,டீசல்

ஆனால், கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் ஒரு வருடம் நிறைவடையுள்ள நிலையில், எவ்வித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

358-ஆவது நாளாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் சென்னையில் இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

Tags :
|