Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது... வங்கதேசம் முழுவதும் கண்டன போராட்டம்

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது... வங்கதேசம் முழுவதும் கண்டன போராட்டம்

By: Nagaraj Wed, 10 Aug 2022 08:18:52 AM

பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது... வங்கதேசம் முழுவதும் கண்டன போராட்டம்

வங்கதேசம்: நாடு முழுவதும் போராட்டம்... வங்கதேசத்தில் பெட்ரோல் விலை திடீரென 52 சதவீதம் உயா்த்தப்பட்டதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

அங்கு டீசல் விலை லிட்டருக்கு 34 டாக்காவும் (ரூ.28.57) பெட்ரோல் விலை லிட்டருக்கு 44 டாக்காவும் ரூ.36.97) உயா்த்தப்படுவதாக அந்த நாட்டு அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. சா்வதேச சந்தை நிலவரம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு கூறியது.

students,organizers,protest,petrol,fuel,rise ,மாணவர், அமைப்பினர், போராட்டம் , பெட்ரோல், எரிபொருள், உயர்வு

எனினும், இதுவரை இல்லாத வகையில் எரிபொருள் விலைகள் 52 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவா் அமைப்பினா் உள்ளிட்டோா் விலையுயா்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பெட்ரோல் விலை உயர்வு அறிவிப்பால் இருச்சக்கர வாகனங்கள் பயன்படுத்துவோர் முதல்நாளே இரவில் பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர். இதனால் பெரும் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

Tags :
|
|