Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 19 காசுகள் உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 19 காசுகள் உயர்வு

By: Karunakaran Fri, 26 June 2020 10:06:06 AM

சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 19 காசுகள் உயர்வு

சர்வதேச சந்தை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை தினந்தோறும் மாற்றி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கினால், பெட்ரோல், டீசலின் தேவை குறைந்தது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் 82 நாட்கள் விலையை குறைக்காமல் இருந்தன.

82 நாட்களுக்கு பிறகு கடந்த 7-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றிமைத்து வருகின்றன. கடந்த 7-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதன்படி, இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

chennai,petrol,diesel,price increase,oil companies ,சென்னை, பெட்ரோல் விலை,டீசல் விலை,எண்ணெய் நிறுவனங்கள்

சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 19 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் ஒரு லிட்டர் 83.37 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 15 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், டீசல் ஒரு லிட்டர் 77.44 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.80.13க்கும், டீசல் லிட்டருக்கு 17 காசுகள் உயர்ந்து ரூ.80.19க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|