Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செல்லப்பிராணிகளால் ஆரோக்கியத்திற்கும் நன்மைகள் கிடைக்கிறது

செல்லப்பிராணிகளால் ஆரோக்கியத்திற்கும் நன்மைகள் கிடைக்கிறது

By: Nagaraj Sat, 15 July 2023 12:42:28 PM

செல்லப்பிராணிகளால் ஆரோக்கியத்திற்கும் நன்மைகள் கிடைக்கிறது

சென்னை: நம் வீடுகளில் நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகள் நமக்கு துணையாக மட்டும் இல்லாமல் நம் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைத் தருகின்றன என்பது பலர் உணர்ந்திடாத உண்மையாகவே இருக்கிறது. உடல் மற்றும் மனநலத்தையும் பாதுகாக்கிறது என்பதை நம்மில் பலர் அறிந்திருக்கவில்லை.

பெரும்பாலான செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் தங்கள் துணையாக விலங்குகளை வைத்திருப்பதை மகிழ்ச்சி தரும் அனுபவமாக உணர்கிறார்கள். என்ன தான் நன்மைகள் இருப்பினும், விலங்குகளின் உரோமம் ஏற்படுத்தும் உடல்நல உபாதைகள் குறித்த பயம் பலருக்கும் உள்ளது. அந்த பயங்களைத் தாண்டி நாய், பூனை, பறவைகள் அல்லது பிற விலங்குகளைப் பராமரிப்பது மனச்சோர்வு, பதட்டம், மன அழுத்தம் ஆகியவற்றைக் குறைப்பதுடன் நம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது என்பது தவிர்க்க முடியாத உண்மை.

செல்லப்பிராணிகள் இல்லாதவர்களை விட செல்லப்பிராணிகளைக் கொண்டவர்கள் பெரும்பாலும் அதிக ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்கிறார்கள் என்பது உண்மைதான் என்கிறது அறிவியல்.

feelings,mood,partner,body language,pets,upbringing ,உணர்வுகள், மனநிலை, துணை, உடல்மொழி, செல்லப்பிராணிகள், வளர்ப்பு

மனித-விலங்கு பிணைப்பின் நன்மைகளை அறிவியல் பூர்வமாக நாம் ஆராயத் தொடங்கியது சமீபத்தில் தான். செல்லப்பிராணிகள் மனிதர்களுடனும் பழகும் பொழுது நமது நடவடிக்கைகளையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள பழகிக் கொள்கின்றன.

உதாரணமாக, நாய்கள் நாம் பயன்படுத்தும் பல சொற்களைப் புரிந்து கொள்வது மட்டும் அல்லாமல், அவை நமது குரல், உடல் மொழி மற்றும் சைகைகளையும் புரிந்துகொள்கின்றன என்பது சிறப்பு.

ஒரு மனித நண்பரைப் போலவே, ஒரு விசுவாசமான நாய் நம் உணர்ச்சி நிலையை அளவிடுவதற்கு நம் கண்களைப் பார்த்து, நாம் என்ன நினைக்கிறோம் மற்றும் உணர்கிறோம் என்பதைப் புரிந்துகொண்டு நம் மன நிலைக்கு ஏற்றவாறு நமக்கு துணையாக நிற்கிறது.

Tags :
|
|