ரஷ்ய வைரங்கள் இறக்குமதிக்கு பிரிட்டன் தடை விதித்தது
By: Nagaraj Fri, 19 May 2023 11:28:04 PM
பிரிட்டன்: தடை விதித்தது... ரஷ்ய வைரங்கள் இறக்குமதிக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.
ரஷ்யாவிலிருந்து வைரம், தாமிரம், அலுமினியம், நிக்கல் ஆகியவற்றின் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள அவர், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு, ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைனின் வெற்றி அவசியம் என்றும், G7 நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான போர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீது பல தடைகள் விதித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags :
britain |
russia |
war |
support |
support |