Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின்தடை ... புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

மின்தடை ... புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

By: vaithegi Sat, 05 Nov 2022 6:22:00 PM

மின்தடை ...   புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை: புகார்கள் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு ... வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலை மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் சேவை மையத்தினை 9445855768 என்ற வாட்ஸ் அப் எண், தொலைபேசி எண் 04175-232363 மற்றும் கைபேசி எண் 9499970214 போன்றயவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து இவற்றை தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின் விநியோகம் தடை மற்றும் மின்சார பொருட்கள் சேதாரம் போன்ற புகார்களை தங்கள் பகுதிக்கு உட்பட்ட பிரிவு அலுவலர் மற்றும் உதவி செயற் பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.

phone numbers,electricity ,தொலைபேசி எண்கள்,மின்தடை

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களுடைய மின் விநியோகம் தடை பற்றி புகார்களை 9498794987 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களது மின் தடை குறித்த புகார்களை கணினி மயமாக்கப்பட்ட மின் விநியோகம் தடை புகார் மையத்தில் பதிவு செய்தால் மின் விநியோகம் தடை நிவர்த்தி செய்யப்படும்.

இதனை அடுத்து இந்த தகவலை திருவண்ணாமலை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பழனிராஜ் அவர்கள் தெரிவித்து உள்ளார்.

Tags :