Advertisement

மொபைல் ரீசார்ஜ்க்கு PhonePe, Paytm நிறுவனம் விளக்கம்

By: vaithegi Sat, 11 June 2022 4:08:23 PM

மொபைல் ரீசார்ஜ்க்கு  PhonePe, Paytm நிறுவனம் விளக்கம்

இந்தியாவில் தற்போது அதிக அளவு பண பரிவர்த்தனைகளை ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் வங்கிகள் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளதால் பகுதி நேரமாக வங்கிகள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மொபைல் மூலம் ரீசார்ஜ் செய்வது அதிகரித்து வந்தது.

மேலும், வங்கிகளில் கூட்டத்தை தவிர்க்க வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மற்றும் PhonePe, Paytm, google pay போன்ற செயலிகள் மூலம் பணம் அனுப்புதல், போன் ரீசார்ஜ் செய்தல், டிக்கெட் முன்பதிவு, ஆன்லைன் ஷாப்பிங் போன்றவைகள் UPI செயலிகள் மூலம் நடைபெற்று வருகிறது.

online shopping,phonepe,paytm,google pay,processor ,ஆன்லைன் ஷாப்பிங் ,PhonePe, Paytm, google pay, செயலி

இந்தியாவில் PhonePe மற்றும் Paytm உள்ளிட்ட செயலிகள் மூலம் போன் ரீசார்ஜ் செய்வதற்கு கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக பயனர்களிடத்தில் எழுந்த புகார்க்கு PhonePe, Paytm நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து PhonePe, Paytm நிறுவனம் கூறுகையில் 100 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

ஆனால், PhonePe 50 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தாலே கட்டணம் வசூலிக்கிறது. இது போன்ற கட்டணங்களை தவிர்க்க பொதுமக்கள் அவரவர் எந்த சிம் பயன்படுத்துகிறீர்களா அந்த நெட்வொர்க் நிறுவனத்தின் ரீசார்ஜ் செயலியை பயன்படுத்துவது நல்லது.

Tags :
|