Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஒரு லட்சம் சிவ லிங்கங்கள் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஒரு லட்சம் சிவ லிங்கங்கள் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

By: Karunakaran Thu, 30 July 2020 1:23:25 PM

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஒரு லட்சம் சிவ லிங்கங்கள் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்

ஒரே கல்லில் ஒரு லட்சம் சிவ லிங்கங்கள் இருப்பதாக கூறும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சிவ லிங்கங்கள் கர்நாடக மாநிலத்தின் ஆற்றங்கரையில் இருந்து எடுக்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக கர்நாடக மாநிலத்தின் சிவாக்ஷி ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்து உள்ளதால், ஒரு லட்சம் சிவ லிங்கங்கள் காணப்படுவதாக இந்த வைரல் பதிவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ததில், இந்த புகைப்படங்களில் உள்ள சிவலிங்கங்கள் சஹஸ்ரலிங்காவில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது.

social websites,one lakh shiva lingam,single stone,viral ,சமூக வலைத்தளங்கள், ஒரு லட்சம் சிவலிங்கம், ஒற்றை கல், வைரல்

சஹஸ்ரலிங்கா கர்நாடக மாநிலத்தின் ஷாமலா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரபல வழிபாட்டு தளம் ஆகும். இங்கு ஆயிரம் சிவலிங்கங்கள் உள்ளன. இந்த சிவலிங்கங்கள் 1678 முதல் 1718 காலக்கட்டத்தில் செதுக்கப்பட்டவை என சஹஸ்ரலிங்கா தளத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெளியான இந்த வைரல் பதிவு உண்மை இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஒரு லட்சம் சிவ லிங்கங்கள் என்பது போலி செய்தி என்பது தெரிய வந்துள்ளது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம். எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள்.

Tags :