Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிவப்பும் நீலமுமாய் ஜொலிக்கும் செவ்வாய் கிரகத்தின் புகைப்படம்

சிவப்பும் நீலமுமாய் ஜொலிக்கும் செவ்வாய் கிரகத்தின் புகைப்படம்

By: Nagaraj Wed, 03 Aug 2022 11:44:28 AM

சிவப்பும் நீலமுமாய் ஜொலிக்கும் செவ்வாய் கிரகத்தின் புகைப்படம்

நியூயார்க்: சிவப்பும் நீலமுமாய் ஜொலிக்கும் செவ்வாய் கிரகத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது நாசா. பிரபஞ்சத்தின் ரகசியங்களை கண்டறிவது அசாத்தியமானது என்றாலும் அதை சாத்தியமாக்கும் முயற்சிகளில் விண்வெளி ஆய்வுகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக நாசா பல்வேறு முன்னெடுப்புகளை செய்கிறது.

அதில் இருந்து பெறப்படும் சில அதிசயமான மற்றும் வித்தியாசமான முயற்சிகளை சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியிடுகிறது நாசா. நாசா வெளிப்படுத்தும் பிரபஞ்சத்தின் ரகசியங்கள் பல முடிச்சுகளை அவிழ்க்கிறது என்று சொன்னாலும், பல ஆகிய காட்சிகளும் காணக் கிடைக்கின்றன. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீல நிற கோடுகள் இருக்கும் ஒரு அழகான காட்சியை அண்மையில் நாசா வெளியிட்டுள்ளது.

இந்தப் புகைப்படங்களில் தெரியும் செவ்வாய் மண்டலம் கம்போவா பள்ளம் என்று அழைக்கப்படுகிறது. இது கிரகத்தின் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. செவ்வாய் என்று சொன்னாலே நம் மனதில் முதலில் வருவது சிவப்பு தரிசு நிலம்தான். சிவப்பு கிரகம் என்று அறியப்படும் செவ்வாய், எப்போதும் சிவப்பு நிறத்துடன் தொடர்புடையது.

mars,geology,structures,explorer,nasa,photo ,செவ்வாய் கிரகம், புவியியல், கட்டமைப்புகள், ஆய்வளர், நாசா, புகைப்படம்

இரவு நேரத்தில் இயல்பாக வானத்தில் பார்த்தாலும் செவ்வாய் கிரகம் சிவப்பு நிறத்தில் காணப்படும் என்பதால், செவ்வாய் கிரகம் நீலமானது என்று யாராவது சொன்னால், அதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் சிவப்பு கிரகத்தில் பல ரோவர்கள் மற்றும் அதைச் சுற்றி ஒரு சுற்றுப்பாதையை வைத்திருக்கும் விண்வெளி நிறுவனமான நாசா, கிரகத்தின் மேற்பரப்பில் தெளிவான நீல நிற கோடுகள் தெரியும் சில படங்களை வெளியிட்டுள்ளது.

மார்ஸ் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ள இந்த அரிய புகைப்படங்கள், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நூற்றுக்கணக்கான மீட்டர் பரப்பளவைக் காட்டுகிறது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பிக்சலும் செவ்வாய் மேற்பரப்பில் 25 அடிக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீல நிற கோடுகள் ஒரு அழகான காட்சி. இந்தப் படங்களில் தெரியும் செவ்வாய் மண்டலம் கம்போவா பள்ளம் என்று அழைக்கப்படுகிறது. இது கிரகத்தின் வடக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது. சிவப்பு கிரகம் ஏன் நீலமாக இருக்கிறது? என்பதற்கான ஆச்சரியமான உண்மையையும் நாசா விளக்குகிறது. இதைத்தான் 'பொய்யான நிறம்' என்பார்கள். நீலப் பகுதி உண்மையில் கிரகத்தைப் போலவே சிவப்பு நிறத்தில் உள்ளது, ஆனால் பிரதிபலித்த ஒளியின் அதிர்வெண்ணில் சிறிய மாறுபாடுகள் காரணமாக நீல நிறத்தில் காணப்படுகிறது. இப்பகுதி உண்மையில் நீல நிறத்தில் இல்லை.

அப்படியானால், ஒரு படத்தை இன்னும் அழகாக மாற்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. உண்மையை நாசாவே விளக்குகிறது. நீல நிறத்தில் உள்ள பகுதிகள் புவியியல் கட்டமைப்புகள் இருப்பதைக் குறிக்கிறது.

ஒரு ஆய்வாளர் இந்தப் படத்தை அவதானிக்கும் போது, இந்தப் புவியியல் கட்டமைப்புகள் எங்கு அமைந்துள்ளன என்பதை விரைவாக அறிந்துகொள்வதற்கு இந்த புகைப்படங்கள் உதவியாக இருக்கும். செவ்வாய் கிரகத்தின் புவியியலை இன்னும் விரிவாகப் புரிந்துகொள்ள இந்த புகைப்படங்கள் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|