Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூரில் விவசாயிகளின் சூப்பர் மார்கெட் என வைரலாகும் புகைப்படங்கள்

பெங்களூரில் விவசாயிகளின் சூப்பர் மார்கெட் என வைரலாகும் புகைப்படங்கள்

By: Karunakaran Thu, 17 Dec 2020 12:07:01 PM

பெங்களூரில் விவசாயிகளின் சூப்பர் மார்கெட் என வைரலாகும் புகைப்படங்கள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்கு பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களில் இன்றும் டிரெண்ட் ஆகி வருகிறது.

பெரும்பாலானோர் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவும், மற்றவர்கள் போராட்டத்திற்கு எதிராகவும் தங்களின் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், மாபெரும் காய்கறி கடை ஒன்றின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படங்களில் இருப்பது விவசாயிகள் சொந்தமாக திறந்து இருக்கும் சூப்பர் மார்கெட் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

photos,viral,farmers supermarket,bangalore ,புகைப்படங்கள், வைரல், விவசாயிகள் பல்பொருள் அங்காடி, பெங்களூர்

அந்த வைரல் புகைப்படங்களில் பல்வேறு காய்கறி வகைகள் தள்ளுவண்டிகளில் வரிசைகட்டி அழகாக நிற்க வைக்கப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்தும் ஒரே அரங்கில் நிற்க வைக்கப்பட்டு இருப்பதை பார்க்க சூப்பர் மார்கெட் போன்றே காட்சியளிக்கிறது. இந்த புகைப்படங்களை ஆய்வு செய்ததில் அவை விவசாயம் சார்ந்த ஸ்டார்ட் அப் ஒன்றில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது.

இதனை பெங்களூரை சேர்ந்த தம்பிகள் துவங்கினர். பெங்களூரில் விவசாயிகள் சொந்தமாக சூப்பர் மார்கெட் துவங்கியது பற்றி இதுவரை எந்த செய்தியும் வெளியாகவில்லை. அந்த வகையில் வைரல் புகைப்படங்களில் இருப்பது உண்மையில் விவசாயிகள் துவங்கிய சூப்பர் மார்கெட் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.


Tags :
|
|