Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த அதி தீவிர புயலான பிபர்ஜாய், மிக தீவிர புயலாக வலுவிழந்தது

அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த அதி தீவிர புயலான பிபர்ஜாய், மிக தீவிர புயலாக வலுவிழந்தது

By: vaithegi Tue, 13 June 2023 10:40:53 AM

அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த அதி தீவிர புயலான பிபர்ஜாய், மிக தீவிர புயலாக வலுவிழந்தது

இந்தியா: அதி தீவிர புயலான பிபர்ஜாய், மிக தீவிர புயலாக வலுவிழந்தது .... நேற்று முன்தினம் புயல் "பிபர்ஜாய்" மத்திய கிழக்கு பருவமழை அனைத்து இடங்களிலும் அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர வடக்கு திசையில் நகர்ந்து, நேற்று 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் போர்பந்தரில் (குஜராத்) இருந்து தென்மேற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில், தேவ் பூமி துவாரகா (குஜராத்) இருந்து தென்-தென்மேற்கே சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து (குஜராத்) தெற்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டு உள்ளது.

இது மேலும் நாளை காலை வரை வடக்கு திசையிலும், அதன் பிறகு. வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் நாளை மறுநாள் அன்று நண்பகல், மிக தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்)- மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும்.

bibarjoy,arabian sea ,பிபர்ஜாய்,அரபிக்கடல்

இதனை அடுத்து அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

இந்த நிலையில் அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த அதி தீவிர புயலான பிபர்ஜாய், மிக தீவிர புயலாக வலுவிழந்தது வருகிற 14ம் தேதி காலை வரை வடக்கில் நகர்ந்து, அதன் பின் வடக்கு-வடகிழக்கில் நகர்ந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

Tags :