Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தான் விமான விபத்துக்கு விமானியின் தவறு காரணம்; முதல் விசாரணை அறிக்கையில் தகவல்

பாகிஸ்தான் விமான விபத்துக்கு விமானியின் தவறு காரணம்; முதல் விசாரணை அறிக்கையில் தகவல்

By: Nagaraj Mon, 25 May 2020 10:50:26 AM

பாகிஸ்தான் விமான விபத்துக்கு விமானியின் தவறு காரணம்; முதல் விசாரணை அறிக்கையில் தகவல்

விமான விபத்துக்கு பைலட் செய்த தவறு காரணமா?... பாகிஸ்தானில் ஏற்பட்ட விமான விபத்துக்கு, பைலட் செய்த தவறு காரணமாக இருக்கலாம் என, முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமுலில் இருக்கும் நேரத்தில் ரமலான் பண்டிகையை மக்கள் கொண்டாடுவதற்காக, உள்ளூர் விமான சேவை, கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் துவக்கியது. கடந்த வெள்ளியன்று, லாகூரிலிருந்து, 98 பயணியர், ஒன்பது ஊழியர்கள் என, 107 பேருடன் புறப்பட்டு சென்ற பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ்' நிறுவன விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

air crash,report,pilot,pakistan,doubt ,விமான விபத்து, அறிக்கை, பைலட், பாகிஸ்தான், சந்தேகம்


இதில், 97 பேர் இறந்தனர். இந்த விபத்து பற்றி விசாரித்த பாகிஸ்தான் விமான போக்குவரத்து துறை, தன் முதல் கட்ட விசாரணை அறிக்கையில் கூறியுள்ளதாவது:

விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்க பைலட் முடிவு செய்து, கராச்சி விமான நிலையத்தில், அனுமதியும் பெற்றார். இன்ஜினிலிருந்து நெருப்பு பொறிகள் பறந்துள்ளன. இதையடுத்து, விமானத்தை தரையிறக்க முடியாமல் வானத்தை நோக்கி பைலட் செலுத்தியுள்ளார்.

அப்போது தான், விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தை பைலட் சரியாக கையாளாதது தான், விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விமானத்தை தரையிறக்க முடியாமல் போனதை தெரிவிக்காமல், விமானத்தை மேலே செலுத்த, பைலட் முடிவு செய்ததும், அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|