Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடக மாநிலத்தில் பிங்க் ஐ என்னும் கண் பாதிப்பு நோய் தீவிரமாக பரவி வருகிறது

கர்நாடக மாநிலத்தில் பிங்க் ஐ என்னும் கண் பாதிப்பு நோய் தீவிரமாக பரவி வருகிறது

By: vaithegi Tue, 08 Aug 2023 4:12:14 PM

கர்நாடக மாநிலத்தில் பிங்க் ஐ என்னும் கண் பாதிப்பு நோய் தீவிரமாக பரவி வருகிறது

கர்நாடக : கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 40,000 மேற்பட்டோர் பாதிப்பு ...கர்நாடக மாநிலத்தில் திடீரென பிங்க் ஐ கண் நோய் மக்களிடையே வேகமாக பரவி கொண்டு வருகிறது. இதையடுத்து கடந்த ஜூலை 25 ஆம் தேதி முதல் நடப்பு மாதம் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரையிலான நாட்களில் மட்டும் சுமார் 40, 477 பேர் பிங்க் ஐ கண் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக மாநிலத்தின் பீதர் மாவட்டத்தில் 7, 693 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதை அடுத்து கண்களில் தொடர்ந்து வலி, கண் சிவத்தல், கண் அரிப்பு கண்களில் இருந்து கண்ணீர் வெளியேறுதல் போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகளாக உள்ளது.

pink eye,disease,eye ,பிங்க் ஐ ,நோய் , கண்


எனவே இத்தகைய அறிகுறி உள்ளவர்கள் எந்த வித அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடக மட்டுமல்ல மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பிங்க் ஐ கண் நோய் கண்டறியப்பட்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு அதிகம் பரவுவதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த கண் நோயின் தாக்கத்தால் பஞ்சாப்பில் பள்ளி மாணவர்களின் வருகை 20% வரை குறைந்து உள்ளது. இது குறித்த மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.

Tags :