Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு வருடத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கும் பிபின் ராவத்

பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு வருடத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கும் பிபின் ராவத்

By: Monisha Mon, 25 May 2020 10:39:45 AM

பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு வருடத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கும் பிபின் ராவத்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணாமாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு நாட்டு மக்கள் நிதி அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, பிரதமரின் நிவாரண நிதிக்கு முக்கிய பிரமுகர்கள், பெரிய கம்பெனிகள் பல தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.

pm relief fund,bipin rawat,prime minister modi,chief of staff,corona virus ,பிரதமர் நிவாரண நிதி,பிபின் ராவத்,பிரதமர் மோடி,முப்படை தலைமை தளபதி,கொரோனா வைரஸ்

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், தனது சம்பளத்தில் இருந்து பிரதமர் நிவாரண நிதிக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு ரூ.50 ஆயிரத்தை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடந்த மார்ச் மாதம் அவர் கடிதம் எழுதினார்.

அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் அவரது சம்பளத்தில் இருந்து ரூ.50,000 பிடித்தம் செய்யப்பட்டது. அடுத்த 11 மாதங்களுக்கு அவரது சம்பளத்தில் இருந்து 50,000 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :