Advertisement

1600 அடி உயரமுள்ள வானளாவிய கட்டிடங்களை கட்ட திட்டம்

By: Nagaraj Sun, 31 July 2022 8:37:55 PM

1600 அடி உயரமுள்ள வானளாவிய கட்டிடங்களை கட்ட திட்டம்

சவுதி: சவூதி அரேபிய அரசு 75 மைல் நீளத்துக்கு இருபுறங்களிலும் 1600 அடி உயரமுள்ள வானளாவிய கட்டடங்களைக் கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவுறுத்தலின்படி வானளாவிய கட்டடங்களை உருவாக்க வடிவமைப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

stadium,high-speed train,ground,anticipation,height,building ,விளையாட்டரங்கம், அதிவிரைவு ரயில், நிலம், எதிர்பார்ப்பு, உயரம், கட்டிடம்

மிரர் லைன் எனப் பெயரிட்டுள்ள இந்தத் திட்டம் கட்டி முடிக்கப்பட்டால் உலகின் மிகப்பெரிய கட்டுமானமாக இருக்கும். இந்தத் திட்டத்துக்கு ஒரு இலட்சம் கோடி டாலர் செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக வால்ஸ்ட்ரீட் ஜர்னல் நாளிதழ் தெரிவித்துள்ளது.


கட்டடங்களின் அடியில் அதிவிரைவு ரயில் இயக்குவதும், நிலத்தில் இருந்து ஆயிரம் அடி உயரத்தில் ஒரு விளையாட்டரங்கம் கட்டுவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

Tags :
|
|