- வீடு›
- செய்திகள்›
- மேற்கு வங்காளத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 கட்டங்களாக பொதுத்தேர்வு நடத்த திட்டம்
மேற்கு வங்காளத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 கட்டங்களாக பொதுத்தேர்வு நடத்த திட்டம்
By: vaithegi Thu, 21 Sept 2023 2:24:39 PM
மேற்கு வங்காளம் : மேற்கு வங்காளம் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் 2 தேர்வுகளை நடத்த மேற்கு வங்காள உயர்நிலைக் கல்வி கவுன்சில் (WBCHSE) திட்டமிட்டு உளது. அதாவது, மாணவர்களின் புதிய வளர்ச்சியின் ஒரு பகுதியாக நவம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 12 -ம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, 2025-26 கல்வியாண்டிலிருந்து இத்திட்டம் அமல்படுத்தப்படும் எனவும், அப்
அதாவது, நவம்பர் மாதத்தில் நடைபெறும் தேர்வில் மாணவர்கள் OMR தாள்களில் பதிலளிக்கும் படியாக இருக்கும் என்றும், மார்ச் மாதத்தில் நடைபெறும் தேர்வு விரிவான கட்டுரை வடிவில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், இரண்டு தேர்வுகளிலும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணில் சராசரி மதிப்பெண் இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.