Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10 ஆண்டுகள் சிறையில் அடைக்க திட்டம்... இம்ரான்கான் குற்றச்சாட்டு

10 ஆண்டுகள் சிறையில் அடைக்க திட்டம்... இம்ரான்கான் குற்றச்சாட்டு

By: Nagaraj Mon, 15 May 2023 7:55:58 PM

10 ஆண்டுகள் சிறையில் அடைக்க திட்டம்... இம்ரான்கான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலம் வாய்ந்த ராணுவம் தேச துரோக குற்றச்சாட்டில் என்னை அடுத்த 10 ஆண்டுகளில் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளது என்று இம்ரான்கான் குற்றம்சாட்டியுள்ளார்.

அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவருமான இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது.

இம்ரான் கானை வரும் 17ம் தேதி வரை வேறு எந்த வழக்கிலும் கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்ஜாமீன் பெற்ற பிறகு, இம்ரான் கான் லாகூரில் உள்ள தனது இல்லத்துக்குத் திரும்பினார். பின்னர் நேற்று இரவு தனது கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ex-pm,imran khan,military , இம்ரான் கான், குற்றச்சாட்டு, திட்டம், ராணுவம்

இந்நிலையில், அரசு மீது இம்ரான் கான் பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பாகிஸ்தானின் பலம் வாய்ந்த ராணுவம் தேச துரோக குற்றச்சாட்டில் என்னை அடுத்த 10 ஆண்டுகளில் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளது.

முதலில், எனது கட்சி உறுப்பினர்கள் மீது வேண்டுமென்றே பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சாதாரண மக்களும் ஊடகங்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. நாளை என்னை கைது செய்ய வரும்போது மக்கள் வெளியே வரமாட்டார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சி இது.

நாளை மீண்டும் இணைய சேவையை நிறுத்தி சமூக ஊடகங்களை தடை செய்வார்கள். பாகிஸ்தான் மக்களுக்காக நான் சொல்வது என்னவென்றால், எனது கடைசி சொட்டு ரத்தம் வரை உண்மையான சுதந்திரத்திற்காக போராடுவேன். அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அடிபணிய மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளோம் என்பதை மக்கள் அனைவரும் நினைவில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர் கூறியது இதுதான்.

Tags :
|