உரிமைத்தொகை பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்
By: vaithegi Thu, 23 Nov 2023 6:04:16 PM
சென்னை: 1.13 கோடி குடும்ப தலைவிகள் ரூ.1000 பெற்று வரும் நிலையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் .... தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட போது 1.06கோடி குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. அதன் பின்னர், மேல்முறையீடு செய்ததில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளும் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டனர்.
அந்த வகையில், நவம்பர் மாதத்தில் மட்டுமே மொத்தமாக 1.13 கோடி குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு உள்ளது.
அதே போன்று, இந்த மாதமும் லட்சக்கணக்கான குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அடுத்த மாதம் மொத்த பயனர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.