Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 100 Mbps பிராட்பேண்ட் இணைய இணைப்பு ...திட்டமிடல்

கேரளா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 100 Mbps பிராட்பேண்ட் இணைய இணைப்பு ...திட்டமிடல்

By: vaithegi Fri, 29 July 2022 8:15:41 PM

கேரளா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 100 Mbps பிராட்பேண்ட் இணைய இணைப்பு ...திட்டமிடல்

கேரளா : கேரளா உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் (KITE) தற்போது பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனமான (BSNL) நிறுவனத்துடன் இணைந்து புதிய சேவை ஒன்றை துவங்க திட்டமிட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது 8 Mbps FTTH (ஃபைபர் டு தி ஹோம்) இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது 100 Mbps பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதை அடுத்து பள்ளிகளில் 100 Mbps பிராட்பேண்ட் இணைய இணைப்பை வழங்குவதற்கான முயற்சியிலும் கேரள அரசு ஈடுபட்டு கொண்டு வருகிறது. மேலும், கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அனைவரும் இந்த அதிவேக இணைய இணைப்பை பயன்படுத்தி கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

kerala,broadband ,கேரளா,பிராட்பேண்ட்

அந்த வகையில் பள்ளிகளில் 100 Mbps இணைய இணைப்பு வழங்கப்பட்டால் இணைய சேவை 2.5 மடங்கு வேகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்புதிய திட்டத்தின் வாயிலாக 4,685 பள்ளிகளில் உள்ள 45,000 வகுப்பறைகள் பயனடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

BSNL நிறுவனம் பள்ளிகளில் 8 Mbps பிராட்பேண்ட் இணைப்பை 100 Mbps ஆக உயர்த்த எந்த கூடுதல் செலவும் இல்லாமல் அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், பள்ளி வகுப்பறைகளில் 100 Mbps இணைய இணைப்பு சேவைகள் இருப்பதால் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் அமைப்புகளை மிக சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று கருதப்படுகிறது.

Tags :
|