கர்நாடகா மாநிலத்தில் கூடுதல் மதுபான கடைகள் திறக்க திட்டமிடல்
By: vaithegi Mon, 25 Sept 2023 4:23:34 PM
கர்நாடகா : கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே மாதத்தில் தான் 3500க்கும் மேற்பட்ட தங்கும் அறைகளுடன் கூடிய பார்கள் திறக்கப்பட்டன. இதை தொடர்ந்து, தற்போது மீண்டும் கர்நாடகா மாநிலத்தில் கூடுதலாக மதுபான கடைகளை திறக்க முதல்வர் ஒப்புதல் அளித்து உள்ளார்.
அதாவது, புதிதாக திறக்கப்படும் மதுபான கடைகள் மூலமாக ரூ.10000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை நிதி திரட்டி அரசின் இலவச திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 உதவித்தொகை, இலவச பேருந்து திட்டம் உள்ளிட்ட திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மதுபான கடைகள் மூலமாக நிதி திரட்டி இந்த திட்டங்களுக்கு பயன்படுத்த இருக்கின்றனர்.
இந்நிலையில், 5000 மக்கள்தொகை கொண்ட கிராம பஞ்சாயத்துகளில் 1 மதுபான கடை அமைக்கப்பட்ட நிலையில் தற்போது 3000 மக்கள் தொகை கொண்ட கிராம பஞ்சாயத்துகளில் மதுபான கடை திறக்கப்படும் என்று விதி திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.