Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் முதற்கட்டமாக 2000 புதிய பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிடல்

தமிழகத்தில் முதற்கட்டமாக 2000 புதிய பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிடல்

By: vaithegi Sat, 29 Apr 2023 3:43:22 PM

தமிழகத்தில் முதற்கட்டமாக 2000 புதிய பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிடல்

சென்னை: கூடுதலாக 2000 புதிய பேருந்துகளை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியீடு .... தமிழகத்தில் தற்போது மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு பற்றியவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போக்குவரத்து துறை அமைச்சர் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.

அதாவது, அரசு போக்குவரத்து துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தற்போதைக்கு 750 பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும், விரைவு போக்குவரத்து கழகத்தில் மட்டுமே 625 பணியிடங்களும், கும்பகோண கோட்டத்தில் 125 பணியிடங்களும் நிரப்பப்பட இருப்பதாக அவர் அறிவித்து உள்ளார்.

new buses,transportation , புதிய பேருந்துகள்,போக்குவரத்து

மேலும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மாதா மாதம் ஓய்வூதியம் சரியான முறையில் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் முதற்கட்டமாக 2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கான நிதியும் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இந்த 2000 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் வரைக்கும் 15 ஆண்டுகளுக்கு பழமையான பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :