Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தெலுங்கானாவில் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டமிடல்

தெலுங்கானாவில் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டமிடல்

By: vaithegi Fri, 06 Oct 2023 1:05:16 PM

தெலுங்கானாவில் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டமிடல்

தெலுங்கானா:1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க திட்டம் ... தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி சார்ந்த பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்த காரணத்தினால் ஒவ்வொரு மாதமும் அடுத்தடுத்த பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து மாணவர்களுக்கும் சரியான ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்கிற நோக்குடன் கிராமங்களில் விளையும் சத்தான காய்கறிகளைக் கொண்டு உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது.

snacks,telangana ,சிற்றுண்டி ,தெலுங்கானா

இந்த நிலையில், தமிழகத்தைப் போலவே தெலுங்கானா மாநிலத்திலும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்க முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டு உள்ளார்.

எனவே இந்த திட்டத்திற்காக ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்க வேண்டிய காலை உணவு பட்டியலையும் தெலுங்கானா பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.

Tags :
|