Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூரு விமான நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் அமைக்க திட்டம்

பெங்களூரு விமான நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் அமைக்க திட்டம்

By: Monisha Tue, 18 Aug 2020 2:23:53 PM

பெங்களூரு விமான நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் அமைக்க திட்டம்

கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. மேலும் தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் உள்ளன. இதனால் பெங்களூருவுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.

பெங்களூரு விமான நிலையம் தேவனஹள்ளி பகுதியில் அமைந்து உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையம் பெங்களூருவில் உள்ளதாக கூறப்பட்டாலும், அது நகரில் இருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது.

இதனால் விமான நிலையத்திற்கு நகரில் இருந்து செல்வதற்கு வாகன நெரிசல் உள்பட நிறைய பிரச்சினைகள் உள்ளன. எனவே பெங்களூரு விமான நிலையம் அருகே ரெயில் நிலையம் அமைத்து அங்கிருந்து, பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு ரெயில்களை இயக்க வேண்டும் என்று விமான பயணிகள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

bangalore,airport,railway station,metro,passengers ,பெங்களூரு,விமான நிலையம்,ரெயில் நிலையம்,மெட்ரோ,பயணிகள்

விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அதற்கான பணிகளும் நடைபெறவில்லை. இந்த நிலையில் விமான பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று பெங்களூரு விமான நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

இதுகுறித்து மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஸ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிப்பதாவது:-பெங்களூருவுக்கு விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு ரெயில்வே பரிசு ஒன்றை வழங்கி உள்ளது. விமான பயணிகளின் பல ஆண்டு கால கோரிக்கையை ஏற்றி பெங்களூரு விமான நிலையம் அருகே புதிய ரெயில் நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல், எந்தவித தடையும் இன்றி பயணிகள் விமான நிலையத்தை அடைய முடியும் என்று கூறியுள்ளார்.

புதிய ரெயில் நிலையம், விமான நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் கட்டப்பட உள்ளதாகவும், இந்த மாத இறுதியில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும், ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு இலவச பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags :
|