Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்து கொடுத்த உறுதிமொழி; கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம்

இங்கிலாந்து கொடுத்த உறுதிமொழி; கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம்

By: Nagaraj Mon, 18 May 2020 10:35:43 AM

இங்கிலாந்து கொடுத்த உறுதிமொழி; கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சம்மதம்

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் இங்கிலாந்து - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடக்கும் என்று தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

pakistan,england,cricket series,guarantee,consent ,பாகிஸ்தான், இங்கிலாந்து, கிரிக்கெட் தொடர், உத்தரவாதம், சம்மதம்

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜூலை, ஆகஸ்டு
மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு உள்ளது. கொரோனா பீதியால் இந்த தொடர் தள்ளிப்போகலாம் என்று தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே சில சர்வதேச தொடர் ரத்து மற்றும் கவுண்டி போட்டிகளை நடத்த முடியாத சூழலால் நிதி நெருக்கடியில் தவிக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் தொடரை நடத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த நாட்டு நிர்வாகிகள் 'வீடியோ லிங்க்' மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

pakistan,england,cricket series,guarantee,consent ,பாகிஸ்தான், இங்கிலாந்து, கிரிக்கெட் தொடர், உத்தரவாதம், சம்மதம்

இதில் உயரிய பாதுகாப்பு, ரசிகர்கள் இல்லாத மூடப்பட்ட ஸ்டேடியத்தில் போட்டி, மைதானத்தை ஒட்டியுள்ள ஓட்டலில் தங்கும் வசதி போன்ற உத்தரவாதங்களை இங்கிலாந்து தரப்பில் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது.

Tags :