Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடைசி தேர்வை தவறவிட்ட பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

கடைசி தேர்வை தவறவிட்ட பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

By: Monisha Wed, 17 June 2020 1:23:03 PM

கடைசி தேர்வை தவறவிட்ட பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

கொரோனா வைரஸ் காரணமாக நாடுமுழுவதும் முதன் முதலாக மார்ச் 22-ம் தேதி (ஞாயிற்று கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. கடைசி தேர்வு மார்ச் 24-ம் தேதி (செவ்வாய் கிழமை) நடைபெற்றது.

ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்று அச்சம் காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வின் கடைசி நாளன்று நடைபெற்ற வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் தேர்வை கணிசமான மாணவர்கள் தவறவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் எழுதாமல் விட்ட வேதியியல் மற்றும் கணக்குப் பதிவியல் படங்களுக்கான தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

plus two,chemistry,accounting,examination,students ,பிளஸ்-2,வேதியியல்,கணக்குப் பதிவியல்,தேர்வு,மாணவர்கள்

தேர்வை தவறவிட்ட மாணவர்கள் தேர்வை தவறவிட்டதற்கான காரணத்தை குறிப்பிட்டு மீண்டும் எழுத விருப்பம் தெரிவித்து தலைமை ஆசிரியர்களிடம் ஒரு கடிதம் வழங்க வேண்டும்.

அவ்வாறு மீண்டும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் குறித்த விவரங்களை 24-ம் தேதிக்குள் பெற்று ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Tags :