Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இம் மாத இறுதிக்குள் வெளியிடப்படும்; கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இம் மாத இறுதிக்குள் வெளியிடப்படும்; கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

By: Monisha Thu, 23 July 2020 3:01:38 PM

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இம் மாத இறுதிக்குள் வெளியிடப்படும்; கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட 7 ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்குவதற்காக பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது. பிளஸ்-2 வகுப்பில் விடுபட்ட பொதுத்தேர்வு எழுத விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கு வருகிற 27-ந் தேதி தேர்வு நடைபெறும். எஞ்சியுள்ள மாணவர்களும் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கும் தேர்வு நடத்திட அரசு தயாராக உள்ளது.

plus1,examination,results,minister of education,ka sengottayan ,பிளஸ்1,தேர்வு,முடிவுகள்,கல்வித்துறை அமைச்சர்,கேஏ செங்கோட்டையன்

பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளது. தேர்தல் காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்தப்படும் சேவைகளை போன்று, பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் இருக்கும் வகையில் தற்போதைய பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் அல்லது 2-ம் வாரத்தில் வெளியிடப்படும். கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் உள்ளதால் பெற்றோர்களின் கருத்து அறிந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனை பெற்று பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியல்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|