Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிளஸ்-2 துணைத்தேர்வு 21-ந் தேதி தொடங்குகிறது...வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பிளஸ்-2 துணைத்தேர்வு 21-ந் தேதி தொடங்குகிறது...வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

By: Monisha Sat, 29 Aug 2020 10:32:01 AM

பிளஸ்-2 துணைத்தேர்வு 21-ந் தேதி தொடங்குகிறது...வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 துணைத்தேர்வு 21-ந் தேதி தொடங்க இருப்பதையடுத்து, தேர்வு மையங்களில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கான துணைத்தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடங்க இருக்கிறது. இதில் எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தேர்வு அடுத்த மாதம் 21-ந் தேதி தொடங்கி 26-ந் தேதி வரையிலும், பிளஸ்-1 துணைத்தேர்வு அடுத்த மாதம் 29-ந் தேதி முதல் அக்டோபர் 7-ந் தேதி வரையிலும், பிளஸ்-2 துணைத்தேர்வு அடுத்த மாதம் 21-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.

sslc,plus1,plus2,sub exam,social gap ,எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1,பிளஸ்-2,துணைத்தேர்வு,சமூக இடைவெளி

இந்த தேர்வுக்கு தேர்வர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் தேர்வு மையங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமை செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். தேர்வு எழுதும் மையங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், வேறு மாவட்டத்தில் இருந்து பயணம் செய்து வரும் தேர்வர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Tags :
|
|
|