Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

By: Nagaraj Sun, 14 May 2023 10:39:08 PM

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடில்லி: வாழ்த்துக்கள் தெரிவித்தார்... கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அறுதி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில், மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சி, 5 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சிக்கட்டிலில் அமர்கிறது. இந்நிலையில், கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. 2013ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியைச் சேர்ந்த சித்தராமையா முதலமைச்சரானார்.

prime minister modi,greetings,rahul gandhi,congress,victory,karnataka ,பிரதமர் மோடி, வாழ்த்து, ராகுல்காந்தி, காங்கிரஸ், வெற்றி, கர்நாடகா

தற்போது கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஒரு கட்சி ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய நிலையில், 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 65 தொகுதிகளில் வெற்றி பெற்று 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தேர்தலில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் கட்சி நிறைவேற்ற வாழ்த்துக்களையும் கூறிக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தேர்தலில் பாஜகவிற்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றியை கூறிக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Tags :