Advertisement

குரு பூர்ணிமாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

By: Karunakaran Sun, 05 July 2020 3:26:36 PM

குரு பூர்ணிமாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் சென்று மழைக்காலம் தொடங்கும் ஆனி மாதத்தில் குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. ஆனி மாதம் வரும் பவுர்ணமி அன்று ‘குரு பூர்ணிமா’வாக கொண்டாடப்படும். அன்றைய தினம் தங்களுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் குருவாக திகழ்ந்த நபர்களுக்கு மரியாதை செலுத்தப்படும்.

குருவாக திகழ்ந்த நபர்களுக்கு மரியாதை செலுத்தப்படுவதால் இந்த தினம் சிறப்பு வாய்ந்த தினமாக விளங்குகிறது. அதன்படி இன்று குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. குரு பூர்ணிமாவை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய பிரதமர் மோடியும் இந்த தினத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

pm modi,guru purnima,congratulate,india ,பிரதமர் மோடி, குரு பூர்ணிமா, வாழ்த்து, இந்தியா

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், குரு பூர்ணிமாவுக்கு ஏராளமான வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இன்றைய தினம் நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய குருவிற்கு மரியாதை செலுத்தும் சிறப்பான நாளாகும் என்று பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த குரு பூர்ணிமா கொண்டாட்டம் தற்போது குறைந்துள்ளது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் குரு பூர்ணிமா அன்று பவுர்ணமி நிலவில் வெண்ணிற உணவுகள் பரிமாறப்பட்டு இந்த தினம் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :