Advertisement

பாஜக எம்பிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

By: vaithegi Tue, 08 Aug 2023 11:41:44 AM

பாஜக எம்பிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியா : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்து மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சனைகள் பற்றி குரல் எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் சரிவர நடைபெற முடியாமல் முடங்கி கொண்டு வருகிறது. மேலும் அதுமட்டுமில்லாமல், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி இரு அவைகளிலும் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள்கொண்டு வந்தனர் .

advice,pm modi,bjp mp ,ஆலோசனை, பிரதமர் மோடி,பாஜக எம்பி


இதையடுத்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. எனவே அதன்படி, இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதத்துக்கு வர உள்ள நிலையில், பாஜக எம்பிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Tags :
|