Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மத்திய பிரதேசத்திலுள்ள 750 மெகாவாட் சூரிய மின்திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி

மத்திய பிரதேசத்திலுள்ள 750 மெகாவாட் சூரிய மின்திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி

By: Karunakaran Fri, 10 July 2020 09:44:26 AM

மத்திய பிரதேசத்திலுள்ள 750 மெகாவாட் சூரிய மின்திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி

நாட்டில் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு வேண்டிய மின்சார தேவையைப் பூர்த்தி செய்யவும், மின் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், வரும் 2022-ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்பின் வழியே 175 ஜிகா வாட் மின்சாரம் பெறுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

pm modi,madhya pradesh,solar plant,750 mw ,பிரதமர் மோடி, மத்தியப் பிரதேசம், சூரிய ஆலை, 750 மெகாவாட்

அதன்படி, தற்போது மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா நகரில் 750 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரிய மின்திட்டம் உள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 2022-ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்பின் வழியேநாட்டில் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு வேண்டிய மின்சார தேவையைப் பூர்த்தி செய்யப்படுவதுடன், மின் உற்பத்தியும் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :