Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொது முடக்கம் நிறைவடையும் நிலையில் நாட்டு மக்களுக்கு இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

பொது முடக்கம் நிறைவடையும் நிலையில் நாட்டு மக்களுக்கு இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

By: Nagaraj Tue, 30 June 2020 09:24:23 AM

பொது முடக்கம் நிறைவடையும் நிலையில் நாட்டு மக்களுக்கு இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு, லடாக் மோதல் மற்றும் சீன செல்போன் செயலிகளுக்கு தடை போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்துவது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

pm modi,today text,corona,curfew,ladakh conflict ,பிரதமர் மோடி, இன்று உரை, கொரோனா, ஊரடங்கு, லடாக் மோதல்

பின்னர் இது பல்வேறு கட்டங்களாக நீட்டிக்கப்பட்டது. இவ்வாறு நீட்டிக்கப்பட்டபோது பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வந்தார்.

தற்போது நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இதில் 2-ம் கட்ட தளர்வுகள் நாளை (புதன்கிழமை) அமலுக்கு வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு, லடாக் மோதல் போன்ற பிரச்னைகளுக்கு மத்தியில் இன்று பிரதமர் உரையாற்ற உள்ளதால் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags :
|
|