Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. செஸ் ஒலிம்பியாட் போட்டி..

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. செஸ் ஒலிம்பியாட் போட்டி..

By: Monisha Thu, 14 July 2022 8:20:49 PM

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. செஸ் ஒலிம்பியாட் போட்டி..

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வருகிற 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார்.சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் துவக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வருகிறார்.மத்திய விளையாட்டு துறை அமைச்சர் உள்ளிட்டவர்களும் பிரதமர் மோடியுடன் கலந்து கொள்ளவுள்ளனர்.

தமிழ்நாட்டில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு வருகை தரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வரவேற்க மிகச் சிறப்பான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

tamilnadu,chess olympiad,modi,mampallapuram, ,தமிழ்நாடு, செஸ் ஒலிம்பியாட்,மோடி,
போட்டி,

இப்போட்டிக்கான தொடக்க விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தொடக்க விழாவில், தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை உலக மக்கள் அனைவரும் அறியும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இப்போட்டியினை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு முதல் பங்களிப்பாக 92 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ள மாமல்லபுரம், பூஞ்சேரி கிராமத்தில், போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பல்வேறு அறிவுறுத்தல்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Tags :
|