Advertisement

பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்

By: vaithegi Tue, 01 Nov 2022 10:34:35 AM

பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்

ஆமதாபாத்: மோடி இன்று பயணம் .... குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கேபிள் பாலம் ஒன்று அமைந்து உள்ளது. இதை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் சமீபத்தில் நடந்து முடிந்தன.

இதன்பின் கடந்த 26-ந்தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டு பொது பயன்பாட்டுக்கு வந்தது. குஜராத்தி மக்களுக்கான புது வருட தொடக்கத்துடன் இணைந்து பாலம் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இதையடுத்து இந்நிலையில், பாலத்தில் சில தினங்களுக்கு முன்பு 500-க்கும் மேற்பட்டோர் இருந்தபோது, திடீரென பாலம் இடிந்து விழுந்துள்ளது.

modi,gujarat ,மோடி ,குஜராத்

இந்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பலர் மீட்கப்பட்டும் உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

இதை அடுத்து இந்த நிலையில், குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நிகழ்விடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட உள்ளார்.

Tags :
|