Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரோஸ்கர் மேளா மூலம் 70,000 பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி

ரோஸ்கர் மேளா மூலம் 70,000 பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி

By: vaithegi Tue, 13 June 2023 11:30:09 AM

ரோஸ்கர் மேளா மூலம்  70,000 பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி

இந்தியா: ரோஸ்கர் மேளா மூலம் மத்திய அரசு பணியில் புதிதாக சேரவுள்ள 70,000 பேருக்கு இன்று பிரதமர் மோடி காணொளி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

நாடு முழுவதும் 43 இடங்களில் வேலைவாய்ப்பு மேளா நிகழ்ச்சியில் மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுத்துறைகளில் பல பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படுகின்றன.

ரோஸ்கர் மேளா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாகும் .

prime minister modi,appointment order , பிரதமர் மோடி, பணி நியமன ஆணை

இதையடுத்து பிரதமர் மோடி, கடந்தாண்டு அக்டோபர் 22-ம் தேதி, 10 லட்சம் அரசு வேலைகள் வழங்குவதற்கான பிரச்சாரத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ‘ரோஸ்கர் மேளா’வின் முதல் கட்டத்தைத் தொடங்கினார்.

மேலும் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆட்கள், நிதிச் சேவைத் துறை, அஞ்சல் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர்கல்வித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த் துறை, சுகாதார அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசில் சேருவார்கள்.

Tags :