Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனாவை எதிர்த்துப் போராட மறுத்து பிரதமர் மோடி சரணடைந்துள்ளார் - ராகுல் காந்தி

கொரோனாவை எதிர்த்துப் போராட மறுத்து பிரதமர் மோடி சரணடைந்துள்ளார் - ராகுல் காந்தி

By: Karunakaran Sun, 28 June 2020 09:30:51 AM

கொரோனாவை எதிர்த்துப் போராட மறுத்து பிரதமர் மோடி சரணடைந்துள்ளார் - ராகுல் காந்தி

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. இதனால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம், டெல்லி போன்றவை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

rahul gandhi,pm modi,coronavirus,surrender ,கொரோனா,பிரதமர் மோடி, ராகுல் காந்தி, சரண்

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டம் ஏதும் இல்லாததால் பிரதமர் மோடி அமைதியாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டில் புதிதாகப் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவியுள்ளது. அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசிடம் திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ஊடகங்களில் வந்துள்ள செய்திகளை தனது பதிவில் இணைத்து, பிரதமர் மோடி அமைதியாக உள்ளார். கொரோனாவை எதிர்த்துப் போராட மறுத்து அவர் சரணடைந்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

Tags :