Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரதமர் மோடி 5 ஜி சேவையை அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி 5 ஜி சேவையை அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

By: vaithegi Sat, 24 Sept 2022 2:46:27 PM

பிரதமர் மோடி 5 ஜி சேவையை அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: 5 ஜி சேவையை அக்டோபர் 1 ஆம் தேதி தொடக்கம் ... அதிவேக இணைய வசதியை கொடுக்கும் 5 ஜி தொழில்நுட்பம் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மொபைல் காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது. இதையடுத்து இதில் பிரதமர் மோடி 5 ஜி சேவையை தொடங்கி வைக்கிறார். 5ஜி சேவையைப் பொறுத்தவரையில் அலைவரிசை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன.

pm modi,5g service ,பிரதமர் மோடி, 5 ஜி சேவை

மேலும் பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் இரண்டாம் இடத்தில் உள்ளது. குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வருவதற்கு முழுமுயற்சியில் ஜியோ நிறுவனம் களம் இறங்கியுள்ளது.

இதனை அடுத்து வரும் தீபாவளி முதல் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :