Advertisement

நான்கு மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

By: Nagaraj Thu, 06 July 2023 8:44:50 PM

நான்கு மாநிலங்களில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

மத்திய பிரதேசம்: 4 மாநிலங்களில் பிரதமர் சுற்றுப்பயணம்... மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

எனவே, அங்குள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 4 மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடி நாளை மற்றும் நாளை மறுநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை (6 வழிச்சாலை) உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிரதமர் மோடி வரும் 7-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு வருகிறார்.

4 states,tomorrow,pm-modis,whirlwind tour ,சூறாவளி சுற்றுப்பயணம், நாளை முதல் 4 மாநிலங்களில், பிரதமர் மோடி

பின்னர் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகருக்கு செல்லும் பிரதமர் மோடி, கீதா பதிப்பகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதையடுத்து 3 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கியது. கோரக்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுதல். பின்னர் வாரணாசியில் தேசிய நெடுஞ்சாலை 56-ன் ஒரு பகுதியாக வாரணாசி-ஜான்பூர் (4 வழிச்சாலை) சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நாக்பூர்-விஜயவாடா நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி தெலுங்கானா மாநிலம் வாரங்கல் செல்கிறார். அடுத்ததாக ராஜஸ்தானில் உள்ள பிகானீர் சென்று அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

Tags :